K.K. VISWANATHAN - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : K.K. VISWANATHAN |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 11-Dec-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 483 |
புள்ளி | : 114 |
தமிழ் ஈழம்
மலரும் அன்று
நான் இறந்திருந்தால்
என் கல்லறையில்
பதியுங்கள்...
ஈழம் உதித்ததென்று...!
என் இதயத்தின்
இறுதி துடிப்பு
இன்னொரு முறை
துடித்து நிற்கும்...!
ஈழ மக்களை பற்றி
*துடிக்கும் தொப்புள் கொடி*
என்னும் கவிதை
புத்தகம் வெளிட்டுருகிறேன்...!
இன்னும் காலம் விடியவில்லை.
இந்தியனே கண்ணுறங்கு
இமயம் முதல் குமரி வரை
இந்தியாதான் கண்ணுறங்கு.
விழித்தாலே வேதனைகள்
விடியும்வரைக் கண்ணுறங்கு.
விழித்துகொண்டால் சாதனைகள்.
விளங்கும் வரை கண்ணுறங்கு.
இரவு கண்ட சுதந்திரமோ
இருண்டிருக்கு கண்ணுறங்கு.
இருளிலிலிங்கு உறவுகளோ
புரியவில்லை கண்ணுறங்கு.
சட்டம்கூடக் கண்ணைக்கட்டி
முட்டுதிங்கு கண்ணுறங்கு.
குற்றம் என்னும் கருப்புதானே
சுற்றுதிங்கு கண்ணுறங்கு.
சுமைகளையே சுமந்தலைந்து
சோர்ந்தவனே கண்ணுறங்கு.
அமைதியெனப் பொய்களிங்கு
அலைவதாலே கண்ணுறங்கு.
கொ.பெ.பி.அய்யா
அன்று..
ஆரம்ப பள்ளியில் உன்னைவிட்டு
அழுகையோடு நீ என்னைத்தொட்டு
சினத்தோடு நானும் கையை விட்டு
சிந்திவிட்டு வந்தேன் தள்ளி விட்டு..!
இன்று..
பொறுப்பை போக்கி இல்லமொன்றில்
பொறுப்பாய் எனை நீ விட்டபோது
பொங்கும் என் மன குமுறல் விட்டு
போனாயே என் செல்ல மகனே..!
ஆரம்ப இல்லத்தில் உனை விட்டதற்க்கு
அநாதையாக எனை போட்டு விட்டாய்..!
அன்று..
உன் கல்விக்காய் நல்பள்ளியை நாடினேன்
உன் கல்விதரம் சிறக்க அலைந்து தேடினேன்
முன் குறை கண்டு உன்னோடு சாடினேன்
முதல்தரத்தில் வெல்ல ஆனந்தம் பாடினேன்..!!
இன்று..
என் சுமை இறக்க பலநாள் அலைந்தாயே
என் தரத்துக்கு அக்கறையாய் சுழன்றாயே
******ஒத்த புள்ள*****
என்னருமை மகனே
உச்சி வெயில்
தலை எரிக்கும் நேரத்துல
பச்ச புள்ளைகள
படுக்க வச்சிட்டு
வேர வேடுக்க போனேனே...
இதிகாசம் தாண்டி
மூனு பொட்டைக்கு அடுத்து
முழுசா போறப்பெனு
என் மூச்சி காத்தல்லாம் புடிச்சி
முத்தமா கொடுத்தேனே...
ஏழு நாள் கழிச்சி
போறப்பெனு
நேரம் குறிச்சி
கொடுத்தாங்களே..
யாருடா மவனே
உன்ன எட்டி ஒதச்ச...
எங்கிருந்து வந்தானுவளோ
எருமையில வந்தானுவளோ..
என் வைத்த கிளிச்சி உனக்கு
சுடுகாட்டுக்கு வாசப்படி
ஆக்கிட்டனுவளே...
உன்ன கை நெறைய தூக்கி
கலங்காம பாத்துக்க
ஆசபட்டேனே....
கை தூக்கி நீ என்ன தேட
கை அறுந்து கிடக்கேன்
நான்
பெருத்த வலி
தலை சுற்றளுடன்
மனதும் மயங்கி
விழுகிறது..!
என் முகம் பார்த்து
புரிதல்கள்
புன்னகை
சவுக்கை
வீசுகிறது..!
சிறைச்சாலை
செங்கல்லாக
தினம் ஒரு
குற்றவாளி
என் கண் முன்
நானே...!
முகமுடி
மாற்ற முயற்சிக்கிறேன்
மின்மினி பூச்சின்
ஆகாய நிலவு
ஆசை போல..!
பனித்துளி கூட
தேகம் பட்டு
அழுது
வடிகிறது...!
விஷமங்கள்
புரிந்தும்
விலக முடியவில்லை
இதயச்சுடர்
எரிகிறது
துடிப்பு நிற்காமல்
வெடிக்கிறது
வேதனைகள்...!
உவமை பேசிய
உதடு உமையானது
தோலுரித்து
தோண்டி
பார்கிறேன்
என்னுயிரை...!
இரத்தம் சொட்ட
அழுகிறேன்
என் குணம் மாற...!
****கே.கே.விஸ்வநாதன்****