வேறு மணம் வேண்டும்

பெருத்த வலி
தலை சுற்றளுடன்
மனதும் மயங்கி
விழுகிறது..!

என் முகம் பார்த்து
புரிதல்கள்
புன்னகை
சவுக்கை
வீசுகிறது..!

சிறைச்சாலை
செங்கல்லாக
தினம் ஒரு
குற்றவாளி
என் கண் முன்
நானே...!


முகமுடி
மாற்ற முயற்சிக்கிறேன்
மின்மினி பூச்சின்
ஆகாய நிலவு
ஆசை போல..!

பனித்துளி கூட
தேகம் பட்டு
அழுது
வடிகிறது...!

விஷமங்கள்
புரிந்தும்
விலக முடியவில்லை
இதயச்சுடர்
எரிகிறது
துடிப்பு நிற்காமல்
வெடிக்கிறது
வேதனைகள்...!

உவமை பேசிய
உதடு உமையானது
தோலுரித்து
தோண்டி
பார்கிறேன்
என்னுயிரை...!

இரத்தம் சொட்ட
அழுகிறேன்
என் குணம் மாற...!

****கே.கே.விஸ்வநாதன்****

எழுதியவர் : கே கே விஸ்வநாதன் (28-Sep-13, 6:03 pm)
பார்வை : 102

மேலே