ஒத்த புள்ள

******ஒத்த புள்ள*****
என்னருமை மகனே
உச்சி வெயில்
தலை எரிக்கும் நேரத்துல
பச்ச புள்ளைகள
படுக்க வச்சிட்டு
வேர வேடுக்க போனேனே...
இதிகாசம் தாண்டி
மூனு பொட்டைக்கு அடுத்து
முழுசா போறப்பெனு
என் மூச்சி காத்தல்லாம் புடிச்சி
முத்தமா கொடுத்தேனே...
ஏழு நாள் கழிச்சி
போறப்பெனு
நேரம் குறிச்சி
கொடுத்தாங்களே..
யாருடா மவனே
உன்ன எட்டி ஒதச்ச...
எங்கிருந்து வந்தானுவளோ
எருமையில வந்தானுவளோ..
என் வைத்த கிளிச்சி உனக்கு
சுடுகாட்டுக்கு வாசப்படி
ஆக்கிட்டனுவளே...
உன்ன கை நெறைய தூக்கி
கலங்காம பாத்துக்க
ஆசபட்டேனே....
கை தூக்கி நீ என்ன தேட
கை அறுந்து கிடக்கேன்
நான் மண்ணோட...
எட்டி பாத்தா
என் வவுறு
கிளிஞ்சிருமோனு
கையாள மார
தேடினியா ராசா...
மாரோட தலைய அறுத்து
வேத நெல்லா
வேதச்சிடானுவ ராசா...
உன்ன உயிரோட
உருவனதுக்கு காரணம்
கடைசில சொன்னானுவ
அவன் மண்ணுல
தமிழன்
பொறக்க கூடாதாம்...
*****கே.கே. விஸ்வநாதன்****