நம்பிக்கை எனும் விரல் பிடித்து

உதிர்கின்ற இலைகளுக்கெல்லாம்
அழுதுகொண்டிருந்தால்,
மரங்கள் கனி தரமுடியாது...

எரிகின்ற திரிகளுக்கெல்லாம்
வருந்திக்கொண்டிருந்தால்
தீபங்கள்
ஒளி தரமுடியாது...

விரல்பிடித்து நடந்த
விபரம் அறியா
பருவத்தில்கூட
வீழ்ந்தவுடன்
எழுந்து நடந்தோம்..

இன்றோ,
வீழ்ந்துவிடுவோம்
என்ற பயமே
பாதி கொள்கிறது....

வெற்றி,
தோல்வி,
இரண்டும்
இறைவன் வடிவமைத்த
காலக்கடிகாரத்தில்
இரண்டு முட்கள்.

திரும்ப திரும்ப
வந்துபோகும்,
நிலைத்திருக்கும் நியதியில்லை...

மரணம்,
ஒருநாள்
வருமெனத்தெரிந்தும்,
மனிதன்
வாழ்ந்துகொண்டுதான்
இருக்கின்றான்...

தோல்வியின் முடிவை
முயற்சியாக்கு,
முயற்ச்சியின் முடிவு
வெற்றியாகும்...

இனி துணிவாய் நடப்போம்
நம்பிக்கை எனும்
விரல் பிடித்து...

எழுதியவர் : சிராஜ் (10-Jan-14, 11:07 pm)
பார்வை : 88

மேலே