என் தாய்

கருத்தரித்த நாள் முதல்
கண்ணும் கருத்துமாய் இருப்பாள்
பத்து மாதம் சுமந்து
பாசமாய் வலிகளை கடப்பாள்
நான் பிறந்த அழுகை
குறல்கேட்டு மயங்கிய
நிலையில் புன்னகை செய்வாள்
இறவெல்லாம் நான் அழுதால்
காரணம் அறியாத சிறியவள்
தன் மார்பிலே போட்டு
விடியும் வரை நடப்பாள்

நான்,
கவிழும் போது கவிழ்ந்து
தவழும் போது தவழ்ந்து
உருளும் போது உருண்டு
நிற்க முயலும் போது
அவள் ஆனந்தத்தில் வீழ்வாள்
சிக்கி நடக்கும் போது
ஒலிந்து நின்று மகிழ்வாள்
ஓடி விழும் போது
பார்காத்தது போல் பாவனை செய்து
எழும் வரை மனதில் தவிப்பாள்
கொஞ்சி பேசும் மழலையை
அவள் மட்டுமே அறிவாள்
செய்யும் குறும்புகளை ரசிப்பாள்
எழுதும் போது எழுதி
படிக்கும் போது படித்து
விளையாடும் போது வளையாடி
மறுபடியும் குழந்தையாகவே உறுவெடுப்பாள்

என்,
பரிட்சை நாட்களில் எனது விழி மூடினாளும்
அவள் விழி மூடுவதில்லை
சின்ன சின்ன சாதனைகளை பார்த்து
மலையாய் வியந்து ஊக்குவிப்பாள்
முன்னேற்ற படிகளின் தீபம் அவள்
கவலைகள் உறிந்துக்கொள்ளும்
அவள் மடி ஓர் மந்திர தலையனை
கண்ணீர் துளிகள் தரை தொடும் முன்
அதன் காரணத்தை அறிந்து தீர்த்து வைப்பாள்

கருவறையில் சுமந்து பெற்ற பின்னும்
மன அறையில் என்றும் பூட்டி சுமப்பவளே
என் தாய் .

எழுதியவர் : மு.சுகந்தலட்சுமிபிரதாப் (10-Jan-14, 10:56 pm)
Tanglish : en thaay
பார்வை : 101

மேலே