வாழ்க்கை

உன்னிடம் பெற்றவர்கள் உனை
வாழ்த்தினால் அது கடன்...
உனை பெற்றோர்கள் வாழ்த்தினால்
அது தான் உன் வாழ்க்கை!!

கடலில் கெடக்கும் முத்து!!
முழ்கி எடுத்தாள் தான் உன் சொத்து!
ஆசை மேல் ஆசை வைத்து
அழகான உனை முத்தென பெற்றெடுத்தாள் அன்னை !!

சிலையாக இருப்பதுவும்
ஒரு கலை !
சிந்திக்காமல் வாழ்வது பெரும் பிழை!!
ஒருமுறை உயிரென ஜனித்து விட்டால்
மறுமுறை கெடைக்காது.

தலை முறை பல வந்தாலும்
நீ ஏதும் செய்யா விட்டால் !!
உன் பெயர் நிலைக்காது!
பருவங்கள் மாறும்-உண்மை
அன்பு மாறாது.

வாலிபத்தில் நீ செய்யும் பிழைகளெல்லாம்
கூன் பருவத்தில் பிரதிபலிக்குமப்பா தவறினால்
நீ செய்யும் பிழைகளெல்லாம்
உன் சந்ததியை போய் சேருமப்பா!!
காலம் தவறினாலும் நீதி தவறாத்தப்பா ...

வாழ்வது கலை -பிறர்
வாழ்வை தடுப்பது பிழை
அறிவுக்கு விருந்திடு
அன்புக்கு விழுந்திடு
நற்பண்புக்கு அடிபணி
கடனென பணி செய்
கடமைக்கு செய்யாதே

மனித உயிர்களெல்லாம் ஒரு சமூகம்
உறவுகள் ஒரு சமுதாயம்
உன் மக்கள் என்பது ஒரு குடும்பம்
நீ என்பது தனி ....
தனியே நின்றால் தொடரும் பல பிணி

எழுதியவர் : kanagarathinam (11-Jan-14, 1:13 am)
சேர்த்தது : கனகரத்தினம்
Tanglish : vaazhkkai
பார்வை : 74

மேலே