இந்தியனே கண்ணுறங்கு
இன்னும் காலம் விடியவில்லை.
இந்தியனே கண்ணுறங்கு
இமயம் முதல் குமரி வரை
இந்தியாதான் கண்ணுறங்கு.
விழித்தாலே வேதனைகள்
விடியும்வரைக் கண்ணுறங்கு.
விழித்துகொண்டால் சாதனைகள்.
விளங்கும் வரை கண்ணுறங்கு.
இரவு கண்ட சுதந்திரமோ
இருண்டிருக்கு கண்ணுறங்கு.
இருளிலிலிங்கு உறவுகளோ
புரியவில்லை கண்ணுறங்கு.
சட்டம்கூடக் கண்ணைக்கட்டி
முட்டுதிங்கு கண்ணுறங்கு.
குற்றம் என்னும் கருப்புதானே
சுற்றுதிங்கு கண்ணுறங்கு.
சுமைகளையே சுமந்தலைந்து
சோர்ந்தவனே கண்ணுறங்கு.
அமைதியெனப் பொய்களிங்கு
அலைவதாலே கண்ணுறங்கு.
கொ.பெ.பி.அய்யா