என் ஐநூறு ரூபாயை காணவில்லை

சில ...சிற் சில...
சில தான்...
இந்த கவிதையில்
கவிதையென்றால்
பெரிதாய் புதிதாய்
விஷயமேதுமில்லை
விஷமமுமில்லை...
அரசியல் நமக்கு
அப்பாற்பட்டவை...
நொடியில் தோன்றி
அந்த நொடியிலேயே
மரித்து போகிறது
நம் ரோசங்கள்
அரிசியிலலில்...
வரிசையில் நின்று
வெறும் பையுடன்
வீடு திரும்பினாலும்
மீண்டும் வரும்
அடுத்த வியாழன் என...
வளைந்து போக தெறியும்
சாலைகளில் எனக்கு
என் நேர்மை செல்லரித்தபின்
தாரில் தரம் தேடுவது எப்படி...?
மரமும் இயற்கையும்
மட்டுமா...?
வாரத்திற்கு ஒருமுறையென்ன
வருடத்திற்கு ஒருதடவை
வரட்டுமே நீர்..
எவ்வளவு அழகாய்
ஆக்சிஜனை பிரசவிக்கிறது
தெரு பைப்புகள்...
நேராய்தான் நீட்டினேன்
ஆட்காட்டி விரலை
சற்று முதுகு வளைத்து...
ஆதலால் என்ன
என் சட்டை பையில்
ஐநூறு ரூபாய் தாள்...
அடுத்த நாளே எங்கே
போனதென தெறியவில்லை
நீங்கள் எங்கேனும்
பார்திருக்ககூடும்...
கிடைத்தால் அனுகவேண்டிய
முகவரி
அடுத்த தேர்தல்...

எழுதியவர் : சுரேஷ் குமார் (1-Aug-18, 11:12 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 391

சிறந்த கவிதைகள்

மேலே