நானென்று உண்டோ

நான் விரும்பி பிறந்தேனா!
தாய் , தந்தை இன்னாரென்று
தேர்வேதும் செய்தேனா!
தாய் நகல் எடுத்திருந்தால் ,
பெண்ணென்ற பொதுபெயரா?
தந்தை நகல் எடுத்திருந்தால் ,
ஆனென்றே பொதுப்பெயரா?

புறப்பட்டு தலைபட்டபூமி ,
என் தேசம் என்று சொன்னேனோ !
தந்தையின் மூலப்பொருளால்
தாய் கருவறை அச்சில் வார்த்தெடுக்கப்பட்டதால்
முகச்சாயலும், தோல்நிரசாயலும் பெற்றேனோ !

பேறொன்று இட்டதாலே,
நானென்று ஆனேனா!
மொழி ஒன்று கற்றதாலே,
இவ்வினமென்று சொன்னேனா!?
உணவென்றும் திணித்து,
உடல்மூட்டை பெருத்தேனோ !?
ஐம்புலன் பெற்ற ஞாபகங்களை
அறிவென்று சொன்னேனோ !?

நான்மட்டும் விதிவிலக்கா ?
என் மூலம் தொடங்கியது
புது உயிர் படைப்பு ,
என் குடும்பம் என்ற அமைப்பில் .

பெரு மரம் ஒன்றில்,
அதன் கிளை ஒன்றில்,
சிறு இலையாய் வாழ்வு .
சருகாகி வீழ்ந்திட்டாலும்
சலனமின்றி மரம் வளரும் .
புன்னகை புக்களோடும்,
புது புது கிளைகளோடும்,
பிறந்திட்ட பல இலைகளோடும் .

இது பிரபஞ்ச சுழற்சியா?
இயற்கையின் சூழ்ச்சியா?

எழுதியவர் : (1-Aug-18, 11:45 am)
சேர்த்தது : சகி
பார்வை : 65

மேலே