மீண்ட சொர்க்கம்
ஒற்றை செருப்புடன் ஒருக்களித்து உறங்கும்
அவன் வீதியோரத்தில்
பள்ளி செல்லும் அவன் பிள்ளைக்கு உணவு இல்லை
பசி மயக்கத்தில்
மனைவியின் கண்ணீர் நெருப்பாய் அவள் கன்னத்தில்
உள்ளம் குமுறலில்
அவள் ஏன் அழவேண்டும் , துவள வேண்டும்
நீதியின் கேள்வியில்
நாதியற்ற அவன்தானே கலங்கவேண்டும்
மரத்துப் போன மனதில்
உணர்வலைகள் வற்றுகின்றன அவன் ஏன் இப்படி
சீரற்று இளம்வயதில்
அந்தப் பச்சை மண்ணின் மனதில் ஏதேதோ
ஏக்கங்கள் எண்ணங்களில்
தந்தை பற்றி வெளியில் சொல்ல முடியவில்லை
அவன் கொண்ட பாசத்தில்
மூவரும் மூறு விதத்தில் கோணங்களாக
மனம் புழுங்குவதில்
இத்தனைக்கும் யார் காரணம்/ எது காரணம்/
போதையும் மயக்கமும்
குடிகாரன் என்று சொன்னால் தந்தைக்கு i
இல்லை மரியாதையில்
குடிகாரன் பிள்ளை என்று சொன்னால்
பிள்ளை அவமானத்தில்
இருதலைக் கொள்ளி எறும்பு போல் அன்னை
பரிதவிக்கும் நிலையில்
வேண்டாம் வீண் விதண்டாவாதம் விட்டுவிட போதை
தெளிந்தான் பாசத்தின் பிடியில்
சத்தியத்திற்கு கட்டுப்பட்டான் மனைவிக்கு
மீண்டான் மகிழ்ச்சியில்
பிள்ளையின் கண்ணீர் பாடாய் படுத்தியது
மேலோங்கிய பாசத்தில்
மீண்ட சொர்க்கம் கண்டான் கொண்டான்
ஆரத் தழுவலில்
அன்பான மனைவியை பாசமுள்ள பிள்ளையை
கண்களில் வழியும் கண்ணீரில்.