நீதி
இருட்டினில் நீதி
மறையும் என்பார்
அநியாயங்களை எதிர்த்து
நீதி மன்றங்களில்
சிலபோது நீதி கேட்கையில்
சட்டமும் வளைந்து கொடுத்து
அநியாயம் நீதியாகுதே
சட்டம் இருட்டறை ஆக்குதே
நீதியை சிலர் வாக்கின்
தந்திர திரிப்பில்
நீதியும் அநீதியாகுதே
பின் நீதி எதற்கு
எது நீதி.