ஒரு பாதி காலன் நீயடி

உன் பிம்பங்கள்
சிதறிய தினம் இன்று.
அதே ஓடை
அதே பாதை
பூக்கள் இடையறாது
காற்றை வெட்டுகிறது.
காகங்கள் வருமோ
தேன் அருந்த...?
ஒற்றை மரமும்
ஓலமிடும் தனிமையும்
அரைத்து தின்னும்
மிச்ச நாட்களில்
என் பெயரையாவது
நினைவு கொள்
கிழிந்த இரவுகளில்.
நானோடும் நகரத்தில்
தொலைந்த என் முகமும்
தொலையாத உன் நினைவும்
சந்தி பெருக்கி சாகும்.
சொல்லாத கவிதைகளை
நில்லாது கொல்லட்டும்
பெய்யும் மழையின் எச்சில்.
தோழி...
விலகாத வியப்பொன்று...
எங்கு கற்றாய்
மலர் கொல்லும் வித்தை?

எழுதியவர் : ஸ்பரிசன் (20-Aug-18, 7:03 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 77

மேலே