முத்தமிழ் மூத்தவருக்கு முதல் கவிதை

காஞ்சி அண்ணாவின் தம்பியே
திராவிட கழகத்தின் தும்பியே

செந்தமிழ் அம்பியா
செங்கோல் நம்பியே

திருகுவளையின் திரு ஞானமே
சூரிய ஒளியின் தீபமே

அடித்தட்டு மக்களின் மன்னரே
அரசியல் கலத்தின் ஆசானே


மொழியை முன் மொழிந்தவரே
விழியை விதையாக்கியவரே

என்பதை தாண்டியும்
எழுதுகோலை மட்டுமே
தாங்கியவரே மேம்பாலம்
அமைத்த மேதகையே

அளவிலா அறிவுடைய
அருந்தொகையே
ஐந்து முறை ஆட்சி
செய்த பெருந்தகையே

மூத்த மொழி என்று
முழங்கிய புலவரே

தோல்வியை தோளில்
சுமந்து தோய்வின்றி
அயராது உழைத்து அ
தாய்மொழியை ஆயுதமாய்
எடுத்து தனக்கென
தமிழகத்தில் நிலைத்து
நிமிர்ந்த தலைவரே


அரைநூற்றாண்டு அறிஞரே
கலை இலக்கியத்தை காத்த கலைஞரே
எழுச்சியூட்டும் எழுத்தரே
வேட்டிகட்டிய பா வேந்தரே


எளிய உடை
வீர நடை
வலிய படை
நெடிய கொடை
உரிய விடை
வீர முழக்கம் .
வீழாத இயக்கம்
அஞ்சாத நெஞ்சம்
கொண்ட தலைவரே

சூழ்ச்சிக்கு சூலுரைத்து
வீழ்ச்சிக்கு போர்தொடுத்து
வெற்றிக்கு வித்திட்ட வித்தகரே

கழகத்தில் நீ இருந்தாய்
காற்றில் ஏன் நீ கலந்தாய்
நொடியும் ஓயாத நீ ஓய்வெடுத்து
மறுபடியும் தளபதியாக ஒளிர்வாய்
என காத்திருக்கிறோம் ...

எழுதியவர் : KARTHIK (20-Aug-18, 7:15 pm)
சேர்த்தது : ஆகார்த்திகேயன்
பார்வை : 40

மேலே