முத்தமிழருக்கு முதல் மரியாதைகவிதை
எழுந்து வா தலைவா !!
திராவிட தீபமே
தேன் சுவை அமிழ்தமே ..
செம்மொழி செல்வமே
கதிர் ஒளியே
கழகத்தின் உளியே
இழந்து விட்டோம் நாங்கள் இழந்து விட்டோம் ....
தாயகத்தின் தலைவரே
தர்மத்தின் முதல்வரே
செம்மொழியின் முனைவரே
திரையுலகில் கால்பதித்து
தாய்மொழியில் நூல்பிடித்து
உயிராக உணர்வாக
உரம் கொடுத்து
உயிர் கொடுத்த
உறவே ..எங்கள் .உயிரே
உன்தன் அவம் கண்டு உயிர் துடித்தோம்
உன் குரல் கேட்க
கண்விழித்தோம்
உன் புகழ் பாடி
எழ வைத்தோம் தலைவா .."
"எழுந்து வா தலைவா "என்று
உச்சி வரை உன் உறவு இருக்கு
உணர்வோடு அது துணையிருக்கு ..
உனை நினைத்தாலே
உள்ளம் மகிழ்விருக்கு
பல கோடி மக்கள்
உனக்கிருக்கு ...தலைவா!!
சூரியன் எழுமுன் உதித்தாய்
அலை கடலோடு நடந்தாய்
சுறுசுறுப்பாக உழைத்தாய்
கலை இலக்கியத்தில் கலந்தாய்
புது திட்டங்களை வகுத்தாய்
ஏழை மக்கள் குறைகளை
தீர்த்தாயே தலைவா!!
..
உந்தன் ஒளியில் ஒளிர்ந்த
உள்ளங்கள் ஆயிரம்!!
உந்தன் கரங்களால் வரைந்த
காவியம் ஆயிரம் ஆயிரம்!! ..
தலைமுறை கண்ட தலைவா
தாயகத்தின் தமிழா...
மறுபிறவி எடுப்பாயோ??
தமிழ்மொழியை காப்பாயோ??
உன்னால் உயர்ந்தது
தமிழகமே
இல்லாமல் துயர்கிறது
தமிழ்மனமே..
உழைப்பை விதையாக்கி
உணர்வை மொழியாக்கி
உடன்பிறப்பை வளமாக்கி
உடலையும் உயிரையும் அர்ப்பணமாக்கிய
தலைவா கலைஞர் அய்யா.....
கண்ணாடி பேழைக்குள்
நீ நடந்த பாதையிலே
கண்ணீரில் மிதந்து ...
கடலோரத்தில் கரைசேர்ந்தாயே.....
ஓயாமல் உழைத்த நீ ஓய்வுக்காக ....
கழகத்துக்கு இனி நீயே கடவுள் .....
கவிபாடிய கலைஞர் செய்யுள் .....
கார்த்திக் அனந்தன்