இரா ஐ சுப்பிரமணியன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : இரா ஐ சுப்பிரமணியன் |
இடம் | : melagaram, tenkasi |
பிறந்த தேதி | : 07-Nov-1956 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Oct-2011 |
பார்த்தவர்கள் | : 367 |
புள்ளி | : 56 |
இயற்கை எழிலில் நிழல் தேடும் எளியவன்
மழையே மாநிலம் தழைக்க பொழிந்தாயே
நானிலம் சிறக்க நனைத்தாயே
நீயும் பெண் தானோ ஏனெனில் வந்தால் திகட்டல்
வரவில்லை யெனில் வாட்டல்
கூட்டம் கூட்டமாக கூடுகிறீர்கள்
நாட்டம் நாட்டமாக உம்மை நோட்டம் காணவேஎம் கண் கொள்கிறீர்கள்
மழையே நீ வரவில்லை எனில் புறம் முழுக்க வெக்கைச்சூடு
அவள் தான் வரவில்லை எனில் என்
அகம் முழுக்க தாகச்சூடு
மழை பெருகிட வெள்ளம் கூடிட நிலம் எங்கும் சமன் ஆகிடும்
அவள் எமைநாடிட அன்பு கூடிட உளம்
எமக்கு சமன் ஆகிடும்
உம்மை எதிர்த்து ஆலம் ஆக நின்றவரை வேரோடு சாய்ப்பதில் இருவருமே சூறாவளி
உம்மை எதிர்த்து நாணலாக நின்ற எதையும் தென்றலாக தீண்டி செல்வதில் இருவரும் பொறுமைசா
காதல் என்றால் என்ன ?
1.பதின் வயதில் உடல் உணர்வுக்கூற்றில்
ஏற்படும் மாற்றத்தில் உருவாகும் மனதின் மெல்லிய சலனமா ?
அல்லது
2 . கவிஞர்கள் கவிதையில் காவியத்தில் எழுதும் மிகையா ?
அல்லது
3 . திரை நாயகர் நாயகியர் ஆடிப் பாடிக் காட்டும் நடனக் கலையா ?
அல்லது
4 . காமம் அல்லது SEX ன் முன்னுரையா ?
உயிரை தாங்கும்
உணர்வை கொடுக்கும்
உலகத்தில் அடையாளம்
உண்மையில் நிரந்தரமில்லை
உருவம் மாறலாம்
உள்ளம் ஒன்றே உன்னதமானது
காந்தக் குரல்
காத்தோடு கலந்தது.
காணக்குயில் காடு
ஏறப் போகிறது.
சோகம் தீர்த்த நிலா
சோகத்தில் தள்ளி
தேய் நிலாவானது.
பாட்டாலே பலகோடி
மக்களை வளைத்துப்
போட்ட உள்ளம் ஒன்று
இல்லம் விட்டுப் போனதே
இறந்தாலும் இறவா வரம்
பெற்ற இசையே
அமைதியாய்
உறங்கி விடு 😢😢😢
ஆழ்ந்த இரங்கல்
உங்க ஆத்மா சாந்தியடைய
பிரத்திக்கின்றோம். 😞
எளிதாக மறந்துபோகும் பல
நிகழ்வுகளுக்கு
நான் எவ்வித முயற்சியும்
எடுத்ததில்லை
உன்னை மட்டும் மறந்துப்
போகும் முயற்சியில்
நான் தோற்றுத்தான் போகிறேன்
இது கொரானா காலம்
தள்ளி நிக்க சொன்னியே
மாஸ்க் ஆக மாறி முத்தங்கள்
சனீட்டிஸிர் ஆக மாறி கை குலுக்க
கையுறை ஆக
மாறி உடல் தொட
நானும் வருகிறேன்
கவிதைக்கான கருவே
களைந்து போனது
கவிதை குழந்தை
காணாமல் போனது
இழந்தது பெரிது
கிடைப்பது அரிது
இருந்தும் கிடப்பது
இயற்கையின் இணைப்பது