ரமணன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ரமணன் |
இடம் | : செங்கல்பட்டு |
பிறந்த தேதி | : 22-Oct-1969 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Oct-2020 |
பார்த்தவர்கள் | : 106 |
புள்ளி | : 2 |
எனக்கு சிறுவர் இலக்கியத்தில் மிகவும் ஈடுபாடு உண்டு. நல்ல புத்தகங்களை படிப்பதில் ஆர்வம். கிரிக்கெட்,வாலிபால் விளையாட்டுகள் பிடிக்கும். நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நல்ல திரைப்படங்களைப் பார்ப்பேன்.
நம்பிக்கை
படிக்க நேரம் ஒதுக்குங்கள் -- அது அறிவின் ஊற்று
நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள் - அது மகிழ்ச்சிக்கு வழி
உழைக்க நேரம் ஒதுக்குங்கள் - அது வெற்றியின் விலை
உழைப்பின் வேர்கள் கசப்பானவை
ஆனால் அதன் கனி இனிப்பானது !
உன்னை உயர்த்தும் நம்பிக்கை -- இந்த
உலகை உயர்த்தும் உந்தன் கை !
நேற்றைய பகைமை இனி எதற்கு -- உன்
நிழலின் மீதா வெறுப் புனக்கு !
வெற்றியை எட்டும் நோக்கமிருந்தால்
ஒற்றை சிறகிலும் பறக்கலாம் !
ஆக்கம் : ரமணன்
அதிகமாகப் பேசினால், அமைதியை இழப்பாய்..
ஆணவமாகப் பேசினால், அன்பை இழப்பாய்..
வேகமாகப் பேசினால், அர்த்தத்தை இழப்பாய்..
கோபமாகப் பேசினால், குணத்தை இழப்பாய்..
வெட்டியாகப் பேசினால், வேலையை இழப்பாய்..
வெகுநேரம் பேசினால், பெயரை இழப்பாய்..
பெருமையாகப் பேசினால்,
ஆண்டவனின் அன்பை இழப்பாய்..
கொரோனாவிற்கு தடுப்பு மருந்து நமக்கெல்லாம் எப்போது கிடைக்கும் ?
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
தன்னை பார்க்கவந்த நூறாவது மாப்பிள்ளையை... அவன் குடும்பத்தார் வாய் திறக்கும் முன்னே.. தனக்கு பிடிக்கவில்லை என்று கூறி.. உள்ளே சென்று அழுது கொண்டிருந்தாள் முதிர்கன்னி...
சார், எழுத்து இணையதளத்தில் நடைபெறும் நகைச்சுவை போட்டிகளில் பிரபல பத்திரிகைகள்,மற்ற இணைய தளங்களில் வந்ததை பதிவிடலாமா ?