நம்பிக்கை

நம்பிக்கை

படிக்க நேரம் ஒதுக்குங்கள் -- அது அறிவின் ஊற்று

நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள் - அது மகிழ்ச்சிக்கு வழி

உழைக்க நேரம் ஒதுக்குங்கள் - அது வெற்றியின் விலை





உழைப்பின் வேர்கள் கசப்பானவை

ஆனால் அதன் கனி இனிப்பானது !



உன்னை உயர்த்தும் நம்பிக்கை -- இந்த

உலகை உயர்த்தும் உந்தன் கை !


நேற்றைய பகைமை இனி எதற்கு -- உன்

நிழலின் மீதா வெறுப் புனக்கு !


வெற்றியை எட்டும் நோக்கமிருந்தால்

ஒற்றை சிறகிலும் பறக்கலாம் !



ஆக்கம் : ரமணன்

எழுதியவர் : ரமணன் (28-Nov-20, 8:28 pm)
சேர்த்தது : ரமணன்
Tanglish : nambikkai
பார்வை : 2013

மேலே