ஓரறிவு உத்தமிகள்
உலகிற்கு உயிர்வளி கொடுப்பவர்கள்
இவர்கள் உயர்ந்தவர்கள்
ஆம் !
தியாகத்தால் உயர்ந்தவர்கள்
இவர்கள் தீபங்கள்
ஆம்!
உயிர்க்கு ஓளி செய்யும் தீபங்கள்
உச்சி முதல் பாதம் வரை உலகுக்கு
அர்ப்பணிப்பவர்கள்
எளிமையாய் வாழ்பவர்கள்
எல்லோர்க்கும் வாழ்வு கொடுப்பவர்கள்
கீச் கீச் கிளிகள்...
கூக் கூக் குருவிகள்...
டொக் டொக் கொத்திகள்...
இவர்களை நம்பித்தான் !
ஏன்
கோடிநியூரான் கொண்ட உடலே
இவர்கள் உதவி இன்றி இயங்காது
காற்றவன் ....வந்துவிட்டால் போதும்
ஓயாது வாயாடுவார்கள்
சமயத்தில் குத்தாட்டம் போடுவார்கள்
நிசப்தமாயும் நின்றிடுவார்கள்
பசுமையில் அமைதியை பறைசாட்டுவார்கள்
பல்லாண்டு வாழ வழிசெய்பவர்கள்
ஓடி உழைப்பது கடிகாரமெனில்
உட்காராமல் உழைக்கும் உத்தமிகள்
சமூகசேவகிகள்....
இவர்கள் சேவைக்கு என்ன சன்மானம்
ஒன்றுமில்லை..
முடிந்தால் வெட்டி வீழ்த்துவோம்
வேரோடு பிடுங்குவோம்
கோடாரியால் குத்துவோம்
மூச்சு வார்க்கும் ஓரறிவு
உயிர்க்கு இடம் மறுக்கும்
ஆறறிவு ஜடம் !
மாறுமா மனிதம்?
தீருமா என் ஏக்கம் .....?
மாளிகை கட்டி நீச்சல் குளம் வெட்டி
குளிப்பதில் இன்பம் வருமெனில்
மண்விலக்கி விதைபுதைத்து நீர் ஊற்றையில்
கொள்ளை இன்பம் காணலாம்!