மரண பீதி

பீதி பீதி பீதி
எங்கு பார்த்தாலும் பீதி
பீதிக்கு காரணம் ?
மனிதனின் மதியா ?
அவனின் விதியா ?
அல்லது அவன் செய்த சதியா ?
சதி என்றே தோன்றுகிறது.

அன்பாக அரவணைக்க வேண்டிய வாயில்லா ஜீவனை
அன்னமாக பார்த்ததின் விளைவு
அது நமக்கு பிண்டமாக மாறிவிட்டது

காட்டை கபளீகரம் செய்தான்
காற்றை மாசுபடுத்தினான்
ஆற்றை அசுத்தமாக்கினான்
மண்ணை சுரண்டினான்
குவலயத்தை குப்பையாக்கினான்
மொத்தத்தில் பூமிக்கு பாரமாக இருந்தான்
சுமை தாங்காமல் புவி விட்ட பெருமூச்சே கொரோனா வைரஸ்

கண்ணுக்கு பட்டதெல்லாம் அழித்த மனிதனை அழிக்க
கண்ணுக்கு படாத அசுரனை படைத்தது இயற்கை
இந்த அசுரன் செய்கின்ற வேலை
மரணம் மற்றும் பீதி
மரண பீதியில் மனிதன்


ஆறாம் அறிவு உள்ளது என்ற ஒரே காரணத்தால்
ஆட்டம் போட்ட மனிதனுக்கு
தன் ஆட்டத்தை காட்டியது இயற்கை
ஆடிப்போனான் மனிதன்
முடங்கியது வர்த்தகம்
முடங்கியது இயல்பு வாழ்க்கை
ஸ்தம்பித்தது உலகம்

கொரோனாவின் கோர பிடியில் மனிதன்
தீர்வு , காலத்தின் கையில்

எழுதியவர் : venkatram (17-Mar-20, 11:41 am)
சேர்த்தது : Venkatram
Tanglish : marana peedhi
பார்வை : 91

மேலே