மழையும் குழந்தையும்

தாய்முகம் பார்த்து அழுதிடுமே சிற்சமயம்
வாய்விட்டு கொட்டிச் சிரிக்குமே - போயொருத்தர்
வாவென்று கூப்பிட்டால் வாராது ஆதலினால்
மாமழைக்கு நேராம் சிசு .


பொருள் : மழையானது பூமித்தாய் முகம் பார்த்து பெய்யும் ; குழந்தையோ பசிவந்த போதில் தாயின் முகம் பார்த்து அழும் . சில சமயங்களில் மேகத்தில் மின்னல்வெட்டி இடி இடிக்கும் ; அது மேகங்கள் சிரிப்பதுபோல் தோன்றும் . குழந்தையும் பசி அடங்கிவிட்டால் கைகொட்டி , வாய்விட்டு சிரிக்கும். மழையானது " வா " என்று கூப்பிட்டால் வாராது .; அதுபோல வேற்று மனிதர்கள் கூப்பிட்டால் குழந்தை அவர்களிடம் போகாது . ஆகவே மழையும் குழந்தையும் ஒன்றென்று கூறு .

எழுதியவர் : (24-Jan-17, 5:40 pm)
பார்வை : 2912

மேலே