விழிகளின் ஏக்கம்
விழிகளின் ஏக்கத்தையே .....
உனைநினைத்துத் தேக்கிவைத்தேன் .
விட்டுக் கொடுக்கும் என்குணமும்
சொல்லித் தந்தது சுயநலத்தை !!
சிதறி போகா என்சிந்தை - சிதறிப்போய்
சிணுங்கி கொண்டே சிரிக்குதுதடி !! ( 17 )
கர்வம் கொண்ட என்கனவு
கண்ணீர் வடித்துக் கலங்குதடி !
விட்டுப் போன என்உயிரும்
உடனே உடலில் இறங்குதடி !! ( 29 )
இத்தனையும் நடப்பதும் ஏன் பெண்ணே !!
தேவதைநீ என்கண் முன்னே !!
காதலை கேட்கிறேன் நினைவிழந்து
நிஜத்தை கொஞ்சம் திருப்பிக் கொடு !! (43 )
என்றும் எனை நீ தேடி
அன்பை மட்டும் தந்து விடு !!
சொல்லி விட்டேன் என்அன்பை
நானும் முடிவும் உன்கையில் !!
சேர்த்து வைக்கிறேன் கனவுகளை
அன்பின் அடிமையாய் நாம் வாழ !! ( 63 )
வாழ்வை வசந்தமாக்க
வந்தவளே ! சொல்லடி வாய்திறந்து
அமிழ்தமாம் காதல்மொழி !
கோர்வைகளாகும் பலவிரல்கள்
ஆறுதல் கூறபின் ..... !!!! ( 74 )
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
