கதை
தினமும் பசங்க கதை சொல்ல சொல்லி நச்சரிக்கும் போது ( தினம் தினம் கதைக்கு எங்க போறது பாஸு.. ) சின்ன கதை வேணுமா பெரிய கதை வேணுமான்னு கேட்பேன்.
சின்ன கதை :
--------------------
ஒரு ஊர்ல ஒரு குளம் இருந்துச்சாம். அதில இரண்டு வாத்து இருந்துச்சாம். ஒரு வாத்து பேரு போதுமாம். இன்னொரு வாத்து பேரு மறுபடியுமாம். இப்போ மறுபடியும் கிற வாத்து தண்ணிக்குள்ள முங்கிடுச்சுனா மீதம் என்ன இருக்கும் னு கேட்கணும். பசங்க 'போதும்னு ' சொல்வாங்களா அப்போ போய் படுங்கனு சொல்லிடனும்.
பெரிய கதை:
-------------------
மேல சொன்ன கதைல இப்போ முங்க வேண்டிய வாத்து 'போதும்' கிற வாத்து. இப்போ மீதம் என்ன இருக்குனு கேக்கணும் மறுபடியும் னு சொல்வார்களா.. இப்போ மறுபடியும் ஒரு ஊர்ல ஒரு குளமாம் னு ஆரம்பிக்கணும். பசங்க டயர்டாகி அவனுகளா தூங்க போய்டுவானுக.
கொஞ்ச நாளில் உங்க கிட்ட கதைனு பக்கத்துலே வர மாட்டானுக..!