நகைச்சுவை- சிரிக்க சிந்திக்க

அத்தி வரதரின் தரிசனத்திற்கு சில மணி நேரம்
காத்து கொண்டிருக்கும் இரு நபர்களின் உரையாடல் :

முதல் நபர் : எங்க நீங்க எங்கிருந்து வரீங்க இந்த
அத்தி வரதரின் தரிசனத்திற்கு….

இரண்டாம் நபர் (முதல் நபர் கேள்விக்கு);
ஐயா, நான் வந்தவாசி வாசிங்க
நேற்று ராத்திரியே வந்துட்டேனுங்க
இதோ காலை 7 மணி இலிருந்து நிற்கிறேன்
௯ மணி ஆச்சு இன்னும் ௨ மணி நேரம் பிடிக்கும்
தரிசனத்திற்கு என்கிறார்கள் … வெய்யல்
ஒரு பக்கம், தாகம் ஒரு பக்கம் , எப்படியும்
அத்தி வரதரைப் பார்த்தே விடுவதென்று
நான்…….

முதல் நபர் : அப்படி என்னங்க விசேஷம்….. சரி, அத்தி
வரதரைக் கண்டுவிட்டு தரிசனம் கிடைக்க
பரதனிடம் என்ன வரம் வேண்டுவீங்க ?

இரண்டாம் நபர் : வரதப்பா, அடுத்த ஜென்மம் என்று இருந்தால்
என்னையும் ஒரு பெரும் பணக்காரனாக,
உன்னை வெளியே தூஷிக்கும் நாத்திகனாயோ
அல்லது, பணக்கார திருடனாகவோ இல்லை
ஏதோ ஒரு வீ.ஐ.பீ யாகவோ பிறக்கவிடு
உன்னை தரிசிக்க என்னை மற்றவர் கண்டுகொள்ள
இது மாதிரி இந்த ஜென்மத்து இழு பிறவி வேண்டாம்
அப்பா வரதா…….. போதும் போதும் இது என்பேன்

முதல் நபர் : முக்திகொடு என்று வேண்ட மாட்டாயா…?

இரண்டாம் நபர்: இப்படி ஓர் பிறவி அடுத்த பிறவியில் கிடைத்தால்
அத்தி வரதரிடம் வேறு வரம் கேட்க யோசிப்பேன்……

முதல் நபர் (சப்தமில்லாமல் கியூவில் நகர்ந்தார் vaayadaiththu)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Jul-19, 4:44 pm)
பார்வை : 295

சிறந்த நகைச்சுவைகள்

மேலே