உனக்கு என்னிடம்

உனக்கு என்னைப் பிடித்திருக்க வேண்டும்
இல்லையென்றால்
திரும்பிப் பார்த்து இருக்க மாட்டாய்..!

நீ என்னை நேசித்திருக்க வேண்டும்
இல்லையென்றால்
எனக்குப் பிடிக்கும் என்பதற்காக
பச்சைத் தாவணியில் திருவிழாவிற்கு
வந்திருக்க மாட்டாய்..!

உனக்கு என்னிடம் பாசம் இருந்திருக்க வேண்டும்
இல்லையென்றால்
நான் பட்டினி கிடந்த போது
உன் வீட்டுப் பலகாரம்
கொடுத்தனுப்பியிருக்க மாட்டாய்..!

உனக்கு என்னிடம்
காதல் இருந்திருக்க வேண்டும்
இல்லையென்றால்
ஈரம் கசிந்த விழிகளோடு
உன் திருமண அழைப்பிதழை
கொடுத்திருக்க மாட்டாய்..!

உனக்கு என்னை
நிச்சயம் பிடித்திருக்க வேண்டும்
இல்லையென்றால்
உன் குழந்தைக்கு
என் பெயர் வைத்திருக்க மாட்டாய்..!

- வெள்ளூர் ராஜா

(26 . 10 . 2003 தினமலர் - வார மலர் இதழ் அட்டையில் வெளியான எனது கவிதை தற்செயலாக டைரியை புரட்டிய போது கிட்டியது)

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (8-Dec-17, 8:55 am)
Tanglish : unaku ennidam
பார்வை : 531

மேலே