செவ்வந்தி

சின்ன சின்ன
முகப்பரு அது
உன் முகத்தில்
முளைத்த முத்தழகு...

உன் மூக்கு அழகு
அதில் மின்னும்
ஒற்றைக்கல்
மூக்குத்தி அழகு...

காற்றோடு சினுங்கி
உன் காதுகளோடு
உறவாடும்
அந்த ஒற்றைமுடி
அது அழகு...

உன் கழுத்தோடு
உரசி உருளும்
மெல்லிய சங்கிலி
அது அழகு...

செவ்வண்ணம்
பூசாமலே சிவந்திருக்கும்
உன் உதடுகள் அழகு...

உன்
கை விரல்களின்
மென்மைக்கே
உன்னோடு
காலமெல்லாம்
வாழலாம்...

உன் உடையழகு
இருந்தும் இல்லாத
அந்த இடையழகு
நளினம் சிந்தும்
உன் நடையழகு...

அந்த அழகே
உன் அழகை
அள்ளிப்பூசும்
பேரழகி நீ...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (8-Dec-17, 8:55 am)
Tanglish : sevvandhi
பார்வை : 737

மேலே