வேம்பு

வேனலுக்கும் நீ
நோய் தரும் வேதனைக்கும் நீ
மாரி பொழியவும் நீ - முத்து
மாரி மாற்றவும் நீ

சித்திரைப் பூவும் நீ
சித்தர்களின் அதிசயம் நீ
சித்திரம் போல் வளர் நிழலில்
சித்த சுத்தியும் தருபவள் நீ

வாழ வைப்பவள் நீ
நான் வணங்கு தெய்வம் நீ
ஆழ வேரோடு நீ
ஆகாயம் அளப்பவள் நீ

கண்களும் சொக்கும் இரவிலுன் மடியில்
கயிற்றுக் கட்டில் காதலில் பாடும்
உன்னை வெட்டும் கல் மனம் மட்டும்
ஓய்வென்று வரும்போது உன் காற்று தேடும்

மனதில் இனிப்பே
சுவையில் கசப்பே
பச்சை அழகே
பாசத்தில் அன்பே

உன்னிடம் கற்றது பண்பே
மண்ணில் மரங்களின் மாண்பே
எண்ணில் உற்றது உலகில்
உன்போல் யாரிங்கு வேம்பே

-----

எழுதியவர் : ஹரிஹரன் (19-Jun-19, 12:48 pm)
சேர்த்தது : Hariharan
பார்வை : 47
மேலே