Hariharan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Hariharan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  19-Jun-2019
பார்த்தவர்கள்:  131
புள்ளி:  13

என் படைப்புகள்
Hariharan செய்திகள்
Hariharan - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jul-2019 10:47 am

"""""""""""""""""""""""""""""""""""""
*தேன்கூடு*
"""""""""""""""""""""""""""""""""""""
வான்மேகம் போல்கூடும்
வண்ணம் கறுத்தேதான்

தேன்சேர்க்கும் நாளெல்லாம்
தீராமல் உழைப்பேதான்

ராணித்தேனீ சேர்ந்தால்
ரசனைத்தேனீ அதோகதி

தானியங்கிக் கூட்டம்
தனித்தியங்கும் நேர்த்தியைச்

சுட்டுத்தேன் எடுத்திடுவார்
சுவைத்திடும் மனிதரைக்

கொட்டியும் விடமாட்டார்
கெடுத்திடுவார் தேன்கூட்டை

பட்டும் திருந்தாரே பார்!

-ஹரிஹரன்

மேலும்

Hariharan - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2019 9:24 pm

----------------------------------------
படிக்காத மேதை
----------------------------------------

நாட்டை உயர்த்திட நாளும் உழைத்தவர்

பட்டறிவால் திட்டங்கள் போற்றுவதும்- ஏட்டினைக்

கற்றோர் வியந்திடக் காரணமாம் காமராசர்

உற்ற தமிழ்நாட்டைப் பாடு!

-இரு விகற்ப நேரிசை வெண்பா

மேலும்

Hariharan - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2019 9:23 pm

"கதிரவன்"
------------------------------------

உதித்தான் பரிதியும் உள்ளம் நிறையும்

மதித்தேன் இதயம் மகிழ்ந்தேன் - துதித்தேன்

கதியென நம்புவாரைக் கண்டால் உடனே

கதிரவன் நீட்டும் கரம்!

-நேரிசை வெண்பா

மேலும்

Hariharan - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2019 9:20 pm

-----------------------------------
வைரம்
-----------------------------------

மதியோடு
ஐம்புலனும்
தானடங்க
வாழ்க்கை
மதிப்பில்லா
வைரம்தான்
காண்!

-குறள் வெண்பா

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே