தேன்கூடு

"""""""""""""""""""""""""""""""""""""
*தேன்கூடு*
"""""""""""""""""""""""""""""""""""""
வான்மேகம் போல்கூடும்
வண்ணம் கறுத்தேதான்

தேன்சேர்க்கும் நாளெல்லாம்
தீராமல் உழைப்பேதான்

ராணித்தேனீ சேர்ந்தால்
ரசனைத்தேனீ அதோகதி

தானியங்கிக் கூட்டம்
தனித்தியங்கும் நேர்த்தியைச்

சுட்டுத்தேன் எடுத்திடுவார்
சுவைத்திடும் மனிதரைக்

கொட்டியும் விடமாட்டார்
கெடுத்திடுவார் தேன்கூட்டை

பட்டும் திருந்தாரே பார்!

-ஹரிஹரன்

எழுதியவர் : ஹரிஹரன் (20-Jul-19, 10:47 am)
சேர்த்தது : Hariharan
பார்வை : 214

மேலே