ஒருமுறை காதல் சொல்லடி
ரெக்கை இல்லாமல் பறக்கிறேன்
புது வெட்கம் ஏனோ தவிக்கிறேன்
ஆழ்கடல் அழகே என் இதயம் சூழ்ந்ததென்ன
அலைகளின் நுரைப்போல் என் மேல் மெதுவாய் வீழ்ந்ததென்ன
புவி ஈர்ப்பை நியூட்டன் கண்டான்
புது ஈர்ப்பை உன்னால் நானும் கண்டேன்
என்னை இழுத்துதான் எங்கே செல்கிறாய்
எண்ணம் மறந்துதான் நானும் வருகிறேன்
நினைக்கிறேன் கொஞ்சம் தவிக்கிறேன்
உருகினேன் மெல்ல அழுகிறேன்
வாலிப சாலையில் உந்தன் கால்தடம் ஏனடி
என் வாழ்க்கையின் விடியல்கள் உன் கண்விழித்தானடி
உறவே என் உயிரே ஒருமுறை காதல் சொல்லடி....