ABDUL BACKI - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ABDUL BACKI
இடம்:  CHENNAI
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Mar-2018
பார்த்தவர்கள்:  124
புள்ளி:  137

என் படைப்புகள்
ABDUL BACKI செய்திகள்
ABDUL BACKI - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Mar-2020 9:46 am

கருமேகம் கீழிறங்கி
என்னை கடந்ததா என்று
வியந்து போய் இருந்தேன்
கடந்தது மேகமல்ல
அவளது கூந்தல்

முழுநிலா முன் வந்து
மேலாக நகம் கீறிய கோடுகள்
அதுதான் அவளது நெற்றி

சூரிய குடும்பங்கள்
கூட்டாக கூடிவந்து நின்றது போல்
அளப்பறியா வெளிச்சங்கள்
நின்றது சூரியன் அல்ல
அவள்தான்

புன்னகை தோட்டங்களை
இதழோடு பசுமை செய்து
இன்பமாக கனியச்செய்பவள்
அதுதான் அவளது சிரிப்பு

எனக்குள் அவள்
அவளோடு நான்
என்னவளை வாழ்த்திவிட்டேன்

பேனாவால் "கருமை" வைக்கிறேன்
இனியாவது கண்கள் படாமல் இருக்கட்டும்...

BY ABCK

மேலும்

ABDUL BACKI - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2020 10:52 pm

மலர்ந்தும் மலராமல்
சில பூக்கள் கையேந்துகிறது
அவர்களது வீட்டில் வெளிச்சம் வருவதற்காக

சாலையோர விளக்குகளின் அருகில்

புத்தகங்கள் சுமந்து
பள்ளி படிப்பை பாடவேண்டியவர்கள்
வறுமைகளை சுமந்து
சாலையோரம் பாட்டு பாடுகிறார்கள்

பேனாவில் மைகள் ஊற்றி
கீறலிட வேண்டியவர்கள்
வறுமைகள் ஊற்றியதால்
கீறலிட்டு அழுக்கானார்கள்

மகிழ்ந்து விளையாட வேண்டியவர்கள்
கிழிந்த ஆடைகளோடு பாதையாத்திரை வருகிறார்கள்
பசியின் பக்த்தர்களாய்

கல்வியை நினைக்க வேண்டியவர்கள்
கடன்களை நினைத்ததால் - இன்று
மாணவர்கள் அல்ல பிச்சைக்காரர்கள்

எப்போது இது ஒழியுமோ
சர்க்கார் இதை எப்போது அறியுமோ

குழந்தைகளை ம

மேலும்

ABDUL BACKI - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Feb-2020 2:18 pm

மதம் என்பது
வெளியில் உள்ள வேறுபாடு
மனித நேயம் என்பது
உள்ள்ளே உள்ள ஒருமைப்பாடு

நியாயத்தோடும்
நேயத்தோடும் பழகுவோம்
நாங்கள் இந்தியர்கள்...

BY ABCK

மேலும்

ABDUL BACKI - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2020 1:45 pm

காதல் வாகனத்தில்
காமன் வருகிறான்
காயப்படுமோ எனோ அஞ்சி
அவள் தள்ளி நிற்கிறாள்

ஒரு நாள்
சந்திக்க நேரிடும் அப்போது
வாகன சாலையில்
மோகன புறாக்கள்
கைகள் இணைந்து

அவள் இதழ் வண்ணத்தை
இவன் முதல் எடுப்பான்...

BY ABCK

மேலும்

ABDUL BACKI - ABDUL BACKI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Apr-2019 2:01 pm

நேசம் எதனிலும் உண்டு
ஆம்
எதிரியையும் நாம் நேசிக்கலாம்
அவர்களை தீயாய் பார்க்காமல்
காற்றாய் பாருங்கள்

BY ABCK DGS

மேலும்

மிகவும் நன்றி தோழியே 05-Apr-2019 5:35 pm
மிகவும் அற்புதமான கருத்தை தங்கள் கவிதையில் குறிப்பிட்டுள்ளீர்கள். கவிதை மிக சிறப்பு. 02-Apr-2019 6:16 pm
ABDUL BACKI - ABDUL BACKI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Mar-2019 5:52 pm

காலநிலை மாறுமா
காவல் நிலையம் என நம் நாடு மாறுமா
காந்தியின் சுதந்திரம் இங்குண்டு
பெண்களின் சுதந்திரம் எங்குண்டு ??

பசுமை நிலங்கள் எங்கே
என் பசியை போக்கும் விவசாயி நல் மக்கள் எங்கே
சோறு போட்டவனின் நிலை இன்று சோமாலியாவாக ஆனது
சோறு போட்ட பாவத்திற்கா என் விவசாய மக்கள் சாகுது

வேலை வாய்ப்பை தேடுவதே எனக்கு வேலையாய் போனது
வேர்வை சிந்திய பணமெல்லாம் இங்கு (GST) மாறுது
கல்வியை விற்பதற்கு விளம்பரம் உண்டு
கல்வியை கொடுப்பதற்கு விளம்பரம் இல்லை

மீத்தேன் எடுக்க உதவினாய்
எங்களை மீற்றெடுக்க உதவலையே
மாற்றம் வருமா இல்லை ஏமாற்றம் தருமா
இனி எல்லாம் மாறினால் மட்டுமே நாங்கள் வாழலாம்

மேலும்

நன்றி நிச்சயம் எழுதுகிறேன் தோழியே 29-Mar-2019 6:56 pm
நன்றி நிச்சயம் எழுதுகிறேன் தோழரே 29-Mar-2019 6:56 pm
அருமை. அருமை... நடைமுறைத் தமிழில் எழுதியது அருமை அருமையிலும் அருமை... இன்னும் எழுதுங்கள்... 29-Mar-2019 6:54 pm
மிக மிக அற்புதமான கருத்துகளை உங்கள் கவிதையில் குறிப்பிட்டுள்ளீர்கள். மிக சிறப்பு. 29-Mar-2019 6:48 pm
ABDUL BACKI - ABDUL BACKI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Mar-2019 2:15 pm

தினம் தினம் உன் யாபகம்
தித்திக்குதே நம் காதல் நூலகம்
என் இதய புத்தகத்தில்
உன் பெயரை மட்டும்தான் அச்சிட்டேன்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கமாய்
நான் சுவைத்து படிக்கின்றேன்
ஒரு பக்கம் காதல் வாசனை
மறு பக்கம் காம வாசனை

காதல் உண்டாகி காமத்தை அடக்கின்றது
காமம் உண்டாகி காதலை அழைக்கின்றது
இதற்க்கு இடையில்தான் நம் காதல் நூலகம்
புதுமை பெறுகின்றது

BY ABCK DGS

மேலும்

நன்றி 29-Mar-2019 5:52 pm
நல்லா இருக்கு நல்லா இருக்கு; நீங்கள் சொல்லுவது நல்லா தான் இருக்கும் இந்த நூலகத்தில் படிக்க விரும்பும் எல்லோருமே பெரிய படிப்பாளிகள் ஆய் வருவது இல்லை; இருந்தும் படிக்காமல் இருப்பவர்கள் இருப்பதும் வீணே... 26-Mar-2019 1:15 pm
ABDUL BACKI - ABDUL BACKI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Feb-2019 8:10 pm

நினைவுகளில் நீ இல்லையெனில்
என் கனவுகளில் வந்ததென்ன
சத்தம் இன்றி வந்த உறக்கத்தில்
முத்தம் வைத்து உறங்க சொன்னாய்

உன் முகம் தழுவ கண் விழித்தேன்
என் அகம் சொன்ன பாவை நீயோ

BY ABDUL DGS

மேலும்

நன்றி 28-Feb-2019 8:32 pm
மிகவும் அழகான கவிதை. 28-Feb-2019 8:13 pm
ABDUL BACKI - ABDUL BACKI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Oct-2018 10:43 pm

குப்பைகள் என்று வீசப்படுவதெல்லாம்
கொடுப்போம் என்று யோசிக்கப்படுவதில்லை
சிலர் மாறுதல் மட்டுமே
பலருக்கு ஆதரவாக இருக்கும்
உணவளிங்கள் உயிர்கொடுங்கள்

BY DEAR GUYS

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே