பகல் கனவு

காலநிலை மாறுமா
காவல் நிலையம் என நம் நாடு மாறுமா
காந்தியின் சுதந்திரம் இங்குண்டு
பெண்களின் சுதந்திரம் எங்குண்டு ??

பசுமை நிலங்கள் எங்கே
என் பசியை போக்கும் விவசாயி நல் மக்கள் எங்கே
சோறு போட்டவனின் நிலை இன்று சோமாலியாவாக ஆனது
சோறு போட்ட பாவத்திற்கா என் விவசாய மக்கள் சாகுது

வேலை வாய்ப்பை தேடுவதே எனக்கு வேலையாய் போனது
வேர்வை சிந்திய பணமெல்லாம் இங்கு (GST) மாறுது
கல்வியை விற்பதற்கு விளம்பரம் உண்டு
கல்வியை கொடுப்பதற்கு விளம்பரம் இல்லை

மீத்தேன் எடுக்க உதவினாய்
எங்களை மீற்றெடுக்க உதவலையே
மாற்றம் வருமா இல்லை ஏமாற்றம் தருமா
இனி எல்லாம் மாறினால் மட்டுமே நாங்கள் வாழலாம்
இல்லையெனில் .............

இது மாறுமா இல்லையெனில் பகல் கனவாய் போகுமா ??

BY ABCK DGS

எழுதியவர் : (29-Mar-19, 5:52 pm)
Tanglish : pagal kanavu
பார்வை : 75

மேலே