மெளனத்தின் சப்தங்கள்
மெளனத்தின் சப்தங்கள்
அதிகாரம் என்னும்
அலங்காரத்துக்காக
மேடையேறி
கத்துகிறான், கதறுகிறான்
உனக்காகவே நான்
உன்னில் ஒருவன்
நடிப்பின் உச்சிக்கே
சென்று தன்னை
இன்றே மாய்த்து
கொள்ளவும் தயார்
என்கிறான்
எல்லாம் கேட்டு,
பார்த்து உணர்ந்தும்
மெளனமாய்
இருக்கும் வாக்காளன்
தன் மெளனத்தின்
சப்தத்தை தேர்தல்
முடிவின் அன்று
உரக்க சொல்லி விடுகிறான்.

