வாழ்க்கை

உனக்கென்ற வாழ்வில்
எனக்கென சில வரிகள் தந்து
செல்கிறாய்...
கண்கள் இமைக்கும் தருணத்தில்
எத்தனை விதைகள் முளைக்கிறது
எத்துணை மரங்கள் அழிகிறது
சாதனைக்கு பல நாள் உழைப்பு
வேண்டும்
கீழ்நோக்கி செல்ல ஒரு நொடி போதும்
நல்லவராய் வாழ பலரின் நம்பிக்கை
தேவை
கெட்டவராய் இருக்க ஒரு நொடி பொழுது போதும்
நீடித்து செல்ல பல வித போராட்டங்களை கடக்க வேண்டியுள்ளது..
வாழ்வில் உனது என எதுவும் இல்லை
உன்னை நிருப்பித்து கொண்டே இருக்க போராடி கொண்டே இரு..

எழுதியவர் : உமாமணி (6-May-24, 3:30 pm)
சேர்த்தது : உமா
Tanglish : vaazhkkai
பார்வை : 131

மேலே