எச்சரிக்கை

சூரியனே சூரியனே
சற்றே நில்...!!
எங்களுக்கும்
சூடு சொரணை இருக்கு
அதனால்தான் உன் மீது
கோவம் கொண்டு
நாங்கள் யாரும் வெளியே வந்து
உனக்கு மரியாதைத் தருவதில்லை

வருண பகவானை
ஆட்சி செய்வதற்கு
அழைத்து விட்டோம்
அவனும் இடி மின்னலுடன்
உன்னைத் தாக்க வருகிறான்
உயிர் பிச்சைக் கேட்டு
ஓடி ஒளிந்து கொள்....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (7-May-24, 10:14 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : yacharikkai
பார்வை : 191

மேலே