சாலையோர பூக்கள்
மலர்ந்தும் மலராமல்
சில பூக்கள் கையேந்துகிறது
அவர்களது வீட்டில் வெளிச்சம் வருவதற்காக
சாலையோர விளக்குகளின் அருகில்
புத்தகங்கள் சுமந்து
பள்ளி படிப்பை பாடவேண்டியவர்கள்
வறுமைகளை சுமந்து
சாலையோரம் பாட்டு பாடுகிறார்கள்
பேனாவில் மைகள் ஊற்றி
கீறலிட வேண்டியவர்கள்
வறுமைகள் ஊற்றியதால்
கீறலிட்டு அழுக்கானார்கள்
மகிழ்ந்து விளையாட வேண்டியவர்கள்
கிழிந்த ஆடைகளோடு பாதையாத்திரை வருகிறார்கள்
பசியின் பக்த்தர்களாய்
கல்வியை நினைக்க வேண்டியவர்கள்
கடன்களை நினைத்ததால் - இன்று
மாணவர்கள் அல்ல பிச்சைக்காரர்கள்
எப்போது இது ஒழியுமோ
சர்க்கார் இதை எப்போது அறியுமோ
குழந்தைகளை மீட்டெடுத்து
கல்வியை வழங்குங்கள்
நாளைய இந்தியா
கையேந்தாமல் வளரட்டும்
அப்துல் கலாமின் கனவுகளை
நினைவாக்க முயற்சிப்போம்
சாலையோர பூக்கள்
பள்ளி சாலைக்குள் மலரட்டும்...
BY ABCK

