தன்னிலை மறந்தது
இரவுக்கு கதைசொல்ல வந்த
நிலவு
இரவை பகலாக்கியது
நிலவோடு பின்னிக் கொண்ட
இரவோ தன்னிலை மறந்தது
நீண்ட கதைசொன்ன நிலவு
இரவுக்கு இடைவேளை விட்டது
சுயவுணர்வுக்கு வந்த இரவும்
நிலவிடம் விடைபெற்றது
அடுத்து வந்த சூரியன் தன்
பங்குக்கு கதைசொல்ல
சலிக்காத பகல் நின்றதைக்
கேட்டது

