எனக்கெதுவும் வேண்டாம்
எதையோ வேண்டிக்கொண்டானாம்
அதனால்
வேண்டாதவனுக்கு படையலிட்டானாம்
வேண்டுதலும் வேண்டாமையும்
இல்லாதான்
சிரித்து கேட்டுக்கொண்டானாம்
எனக்கெதுவும் வேண்டாம்
உனக்கு வேண்டியதைத்தர தெரியும்
எனக்கு
நான் வேண்டுவது உன்னிடம் மனிதம் மட்டுமே என்றானாம்

