எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கூர்வாள் கொண்டு பெண்களை

காட்சி பொருளாக காணும் 

கயவர்களின் பிறப்புறுப்பை 
தனியே துண்டித்தெரிய வேண்டும் 
அப்போதாவது மனம் சற்று 
சாந்தம் கொள்ளுமா என்று பாக்கத்தான் 
இப்போடியொரு எண்ணம் எழுந்துள்ளது .... 

பாரத மாதாவே இந்த பாரதம் வேண்டாம் 
எனக் கூறி ஒடிவிடுவாள் போலும் 
எவ்வளவு இன்னல்களை இன்னும் 
அனுபவிக்க வேண்டுமோ தெரியவில்லை! 

இறைவா உண்மையில் நீ இருக்கிறாயா? 
என்ற கேள்வி எழுகிறது 
நடக்கும் அனைத்திற்கும் 
நீ ஒருவனே சாட்சி 

எமது பாவங்களுக்கு உம்மிடம் 
தண்டனை எனில் வெறிபிடித்த 
மனிதனை படைத்த உமக்கு 
என்ன தண்டனை என்பதையும் நீயே கூறு .... 
 
இவள் 
 கீதாவின் மகள்       

மேலும்

எண்ணத்தை எழுதவா ?

என்னவென்று ?

நான் எப்பொழுதும்  அவளது 
எண்ணத்தில் வாழ்கிறேன் என்பதையா ?

எனக்காக மட்டுமே அவள் 
வாழ்கிறாள் என்பதையா ?

உண்ண உணவின்றி அவள் 
உறங்கிய நாட்களையா?

உரியனவன் உடன் இல்லாமல் 
வேறொருவளை தேடி சென்றதையா?

என்னவென்று எழுதுவேன் 
என் எண்ணத்தை!!!

அவள் பெயரை இவ்வுலகம் முழங்க
எழுத்தை ஆயுதமாய் நான் 
எடுத்ததையா?

என்னவென்று எழுதுவேன் 
என் எண்ணத்தை !!!

அவளை அனைவரும் எள்ளி 
நகையாடிய பொழுது -அவள்
எமக்காக வாழ்ந்தால் என்பதையா?

சிலர் கட்டில் சுகத்திற்காக மட்டுமே
கல்யாணம் முடிக்கின்றனர் என்பதையா ?

என்னவென்று எழுதுவேன் 
என் எண்ணத்தை !!!

என்னை படிக்க வைக்க அவள்
படாத பாடு பட்டால் என்பதையா?

அவன் எங்களை விட்டு சென்று 
பிறகும் - அவள் விடாது காத்து 
வளர்த்தாள் என்பதையா ? 

என்னவென்று எழுதுவேன் 
என் எண்ணத்தை!!!....  

இவள் 
கீதாவின் மகள்


மேலும்

என்ன நிகழ்கிறது 

எம் தாய் திருநாட்டில் !!! 

உலகம் அழிவின் விளிம்பில்
இருப்பதற்கான அறிகுறியா ? 
நடக்கும் நிகழ்வுகள்!!!! 

நிழலை கூட நம்ப முடியா சூழ்நிலை 
உருவாக்கியது யார் ? 

உயிர்கள் வாழ்வதற்கே இவ்வுலகம் 
உயிர்களை பறிப்பதற்கு அல்ல...  

இதே நிலை தொடர்ந்தால் 
உலகம் அழியும் என்பதில் 
ஆச்சரியமில்லை !!!!! 

தெருக்களில் சாதி வெறி என்றால் 
மாநிலத்தில் மொழி வெறி 
இரு நாடுகளுக்குள் மத வெறி 

வெறி பிடித்து அலைவதால் 
அழியப் போவது பாமர மக்களே  
சிந்தித்து செயல்பட்டாலே தீர்வு கிட்டும் 

வீரம் மட்டும் இருந்தால் வீழ்ந்து போவோம் 
உடன் விவேகம் இருந்தால் மட்டுமே 
உயிர்ப்பிக்க இயலும் - இவ்வுலகை 
அனைவருக்குமானதாய் !!!  

இவள்  
கீதாவின் மகள்.  

மேலும்

காதல் – கண்மூடித்தனமாது 

அது நினைத்தால் நம்மை மிருகமாக்கும் 
சில மிருகங்களை மனிதனாக்கும் 
பல மனிதர்களை மரணிக்க தூண்டும் 
அனைவரையும் உறக்கம் இழக்க செய்யும் - ஆரம்பத்தில் 

 இதனை வேடிக்கை பார்போருக்கு புதிராய் தெரியும் 
 காதலர்களின் பெற்றோருக்கு கடினமாய் தோன்றும் 
 காதலர்களுக்கு மட்டுமே இது காவியமாய் தோன்றும் 

 அவன் அவளுக்காக தரையிலும் நீச்சலிடிப்பான் – அவள் 
 அனைத்திலும் அவன் உடன் இருப்பாள் 

 இவர்களின் வாழ்வில் விதி பல கோணங்களில் விளையாடும் 
 ஒன்று அவள் பிரிந்து செல்வாள் இல்லை அவன் 
 உயிராய் நினைத்திருந்தாலும் விலகி செல்ல தூண்டும் 
 பெற்றோகளின் விருப்பத்திற்காக அதுவே காதல் 

 என்றும் இணைந்தே இருக்கும் 
இவர்கள் உண்மையாய் இருந்தால் பிரியும் இடம் மரணம் 
சரியான நேரத்தில் ஊமையாய் இருந்துவிட்டால் 
அவர்களின் வாழ்வே மரணம் 
 காதலே உலகம் என இருந்தவர்களுக்கு 
இருந்தும் காதல் வாழ்ந்து கொண்டே இருக்கும் 
வேறொருவருக்காக ....                                 

இவள்                                 
விஜயலட்சுமி.      

மேலும்

விவசாயி குமுறல் 


விளை நிலங்கள் எல்லாம் விளைச்சலற்று போக  
வந்தேரியாய் வந்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டம் 
உமக்கு முப்போகம் விளைவித்து உணவு வழங்கிடுமோ? 

மீள முடியாமல் தவிக்கும் விவசாயிகளை 
விதைக்கவிடாமல் செய்ய வந்துள்ள மீத்தேன் திட்டம் வேறு – இவையெல்லாம் 
போதாதென்று புதியாய் கிளம்பியுள்ள பூகம்பமாய் 8 – வழிச் சாலை 
இருக்கும் சாலையை தரமாய் போடாமால் 
விவசாயத்திற்கு வேட்டு வைக்க நினைக்கும் ஒரு கூட்டம்.  

போதாகுறைக்கு குடிநீரையும் குழாய்ப் போட்டு உரிய - கோகோ கோலா! 
இத்தனை இன்பங்களும் நிறைந்த எம் தமிழ்நாட்டில் 
புதிய பொலிவுடன் சாகர்மாலா !

விவசாயிகளை விட்டுவைக்காதோர் 
மீனவனை விட்டுவைப்போமா என்ன ? 

எவ்வளவு முயற்சிகள் நடப்பினும் 
தமிழன் துவண்டுபோக மாட்டன் 
அவனக்கு துணையாய் இயற்கை இருக்கும் வரை. 

ஒருநாள் பஞ்ச பூதங்களும் பொறுத்தது போதும் என 
பொங்கி எழுகையில் புலம்பி பயனில்லை!  
மனிதா மீண்டும் உரக்க சொல்கிறேன் 
இப்புவி உனக்கு மட்டுமானதல்ல.. 

இங்கு நீ இயற்கை அன்னையின் சிறு எச்சமே.... அவள் 
நினைத்தால் மட்டுமே நாம் இங்கு  
இதன் பின்னும் நீ எதையும் கண்டு கொள்ளாமல் 
குனிந்துகொண்டே இருந்தால் ஒருநாள் 
உடைந்து விடுவாய் என்பதை நினைவில் கொள். 

 இவள் -விஜயலட்சுமி.          

மேலும்

 நான் இப்பக்கத்திற்கு புதியவள்! - என்

படைப்புகளில் பிழை இருந்தால் திருத்தவும்
அறிந்து கொள்ள ஆவலாய் வந்துள்ளேன்! 
கீதாவின் மகள் விஜயலட்சுமி....  

மேலும்

கவி பாடுதல் 

கவி பாட நினைக்கும் கவிக் குயிலே
கவி பாடுதல் கடினமல்ல 
கண் சிமிட்டலும் கவிதையாகும் - உன் 
கண் சிமிட்டலும் கவிதையாகும் 
உன் கணவனுக்கு ...

மேலும்


மேலே