மாமன் மகளும் மாறாத அன்பே
மாமன் மகளும் மாறாத அன்பே
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
கலையிழந்த மச்சானின்
கதையைக் கொஞ்சம்/
காலைநேர செங்கதிரே
காதலியிடம் போய்ச்சொல்லு/
நாடிபார்க்கும் படிப்புக்கு
நகரத்துக்கு போனவளே /
நாடிவரத் தோனலையோ
நாகரிகப் பெண்குயிலே/
பட்டம் வாங்கி
பட்டாம்பூச்சியாகப் பறந்தாலும்/
பட்டநிலம் விளைஞ்சாத்தான்
பசியாரும் கண்ணே/
உழுதிடு வலக்கையால்
உறவாக்கிடு இடக்கையால்/
தொழுதிடு இருகையால்
தோல்வியேது வாழ்க்கையில்/
மாமன் மகளே
மாறாத அன்பே/
கோமகளாக வருவாயே
கோபுரமாக உயர்வோமே/
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்