பூ வரும்

ஆறடி மண்னென வாகிய வாழ்க்கையில்
ஆறாத்து ராயிர மாயிர முள்ளதுவே
மீறாத தென்பதை மீறிட வைத்துமென்
மேலுஞ்சங் கடங்கள் தைத்திடும் முள்ளெனவே
*
சீராக வென்றிலா சிந்தையுள் போர்களம்
செந்நீ ராறுகள் செய்திடும் வேளையிலே
தீராத துன்பமும் தீயாகி வாட்டிடத்
தேள்கொடுக் குகளும் தீண்டிடும் மூளையிலே
*
வாராத தெல்லாமும் வந்திடும் காலத்தில்
வாய்ப்புக ளுமெட்டா மல்போகும் தூரத்திலே
நேராத தெல்லாமும் நேர்ந்தது மேற்படும்
நிம்மதி யேந்திடும் நெஞ்சமும் பாரத்திலே
*
பாரமா யாகியப் பாதக வாழ்க்கையைப்
பாடமா யாக்கிப்ப டித்திடும் யாவருமே
வீரமா யெழுந்து வீறுடன் நடக்க
வெற்றியின் மாலைக்கு வீரியப் பூவருமே!
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (20-Apr-24, 1:24 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 49

மேலே