என்ன நிகழ்கிறது எம் தாய் திருநாட்டில் !!! உலகம்...
என்ன நிகழ்கிறது
எம் தாய் திருநாட்டில் !!!
உலகம் அழிவின் விளிம்பில்
இருப்பதற்கான அறிகுறியா ?
நடக்கும் நிகழ்வுகள்!!!!
நிழலை கூட நம்ப முடியா சூழ்நிலை
உருவாக்கியது யார் ?
உயிர்கள் வாழ்வதற்கே இவ்வுலகம்
உயிர்களை பறிப்பதற்கு அல்ல...
இதே நிலை தொடர்ந்தால்
உலகம் அழியும் என்பதில்
ஆச்சரியமில்லை !!!!!
தெருக்களில் சாதி வெறி என்றால்
மாநிலத்தில் மொழி வெறி
இரு நாடுகளுக்குள் மத வெறி
வெறி பிடித்து அலைவதால்
அழியப் போவது பாமர மக்களே
சிந்தித்து செயல்பட்டாலே தீர்வு கிட்டும்
வீரம் மட்டும் இருந்தால் வீழ்ந்து போவோம்
உடன் விவேகம் இருந்தால் மட்டுமே
உயிர்ப்பிக்க இயலும் - இவ்வுலகை
அனைவருக்குமானதாய் !!!
இவள்
கீதாவின் மகள்.