எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஏ ழை ஏர் பிடித்து உழுவதற்கு வேண்டும் ஏழை...

                    ழை
ஏர் பிடித்து உழுவதற்கு வேண்டும் ஏழை
எழுதுகோல் பிடித்த ஏற்றம்
காண வேண்டாம் ஏழை!
பயிரை விளைய வைக்க
வேண்டும் ஏழை
விளைத்ததற்கு விலையை  நிர்ணயிக்க
வேண்டாம் ஏழை!
களத்து மேட்டோடு காலம்
தள்ள வேண்டும் ஏழை
கல்வி கற்று மேலே வர 
வேண்டாம் ஏழை !
உதவுவது போன்ற புகைப்படத்துக்காக அரசியல்வாதிகளுக்கு
வேண்டும் ஏழை
திட்டங்கள் கேட்டு
வர வேண்டாம் ஏழை !
    

நாள் : 28-Feb-19, 3:59 pm

மேலே