அன்பே அன்பே

உனக்காக எழுதப்பட்ட கவிதைகள்
குப்பைகளாகி விட்டன

என்னை புறக்கணிக்கும் அளவிற்கு நீ எப்பவும்
பக்குவப்பட்டவளாய் இருந்தாய்
ஏனெனில் இந்த பூமி அழகானதென இன்னுமும் நம்பும்
சிலபேர்தான் பாவமாய் கவிதை எழுதிகொண்டிருக்கிரார்கள்

நான் ஒரு அன்புக்காக
என்ன வேண்டுமாலும் செய்வேன்
குறிப்பாக எனக்கொரு முத்தம் கிடைக்குமென்றால்
நான் அந்த பெண்ணின் காலடியிலேயே
இறந்துபோகவும் தயாராயிருப்பேன்

ஆனால் எப்படி என்னுடைய அவ்வளவு
பைத்தியக்காரத் தனங்களும்
என்னிடமிருந்து அழிக்கப்பட்டது

காதலிகள் கணவர்களை கவனிக்க சென்ற பிறகு
நான் இந்த பூமியில் அவ்வளவு தனியானேன்

தன்னைப் போலவே என்னையும் நினைத்துவிட்ட
காதலிகள் நான் அழும்போதெல்லாம்
அது பொய்யானதென நினைத்தார்கள்
அவர்களால் தன் காலடியிலேயே மரித்துப்போகும்
ஒரு ஆண்மகனை நினைத்துப் பார்க்க முடியவில்லை

எனக்கு தெரியும்
பெண்கள் எப்பவும் ரொம்ப பாதுகாப்பான
ஆண்களை தேர்ந்தெடுப்பார்களென

ஒரு ஆன்மாவே துன்புறுத்த போதுமானது
காதல் மட்டும்தான்

எனினும் இன்னும் பெண்கள்
ரொம்ப விவரமில்லாதவர்களென நானும் நம்பதான்
ஆசைப்படுகிறேன்

ஆனால் அவர்கள் எப்பவும்
மருதாணி கைகளை முகர்ந்து பார்க்கிறார்கள்
ஐஸ்கிரீம் கேட்பதன் மூலம்
தனக்கு எதுவுமே தெரியாதென நம்பவைக்க முயல்கிறார்கள்

அது உண்மையாகவே இருந்துவிடும் உலகம்
ஆண்களின் கண்ணீரால் நிரம்பியிருக்காது

எழுதியவர் : விஸ்வா (25-Jun-19, 2:42 pm)
Tanglish : annpae annpae
பார்வை : 597

மேலே