காதல்
காதல் 🌹
இளமையின் கவிதை.
இனம் புரியாத உணர்வு.
மானுடத்தின் உரிமை.
மகோன்னதனமான அனுபவம்.
காதல் எப்போதும் வரும்
தெரியாது.
காதல் எதனால் வந்தது அதுவும் தெரியாது.
காதல் எல்லோருக்கும் வருவதில்லை .
காதல் சிலருக்கு வந்தே தீரும்.
பரபரப்புக்கு பஞ்சம் இல்லை
பார்த்தே தீர வேண்டும்
என்ற எண்ணம்.
பசியில்லை, பஞ்சனையில் படுத்தால் தூக்கம் இல்லை.
இன்பமான வேதனை.
சுகானுபவம்.
காதலுக்கு கண் இல்லை.
ஊனை பார்த்து வருவது
உண்மை காதல் அல்ல.
உள்ளத்தை பார்த்து வருவதே உண்மை காதல் .
காதலுக்கு சாதி என்ற சாக்கடை இல்லை
மதம் என்ற பேதம் இல்லை.
ஏற்ற தாழ்வுக்கு இடமே இல்லை.
ஒன்றே குலம் ஒருவனே தேவன்.
மனம் வலிக்கும்.
சோதனை பல வரும்.
உள்ள உறுதியோடு
போராடி வெற்றி பெறுவதே
காதலுக்கு மறியாதை.
உண்மை காதல் நிச்சயம் ஜெயிக்கும், நிலைக்கும்.
- பாலு.