புத்தகத்தின் வரிகளில்

பூக்களின் இதழ்களில்
வருடும் மென்மை
புத்தகத்தின் வரிகளில்
ஒரு மெல்லிய கவிதை
பூப்போல் விரியும் விழிகளில்
வானத்துக் கருமை
புன்னகை இதழ்களில்
ஒவ்வொரு முறையும் புதுமை
இவைகளை திரும்பத் திரும்பப் பார்க்கிறேன்
எப்போதுமே இனிமை !

எழுதியவர் : கவின் சாரலன் (25-Jun-19, 4:37 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 65

புதிய படைப்புகள்

மேலே