பூக்களுக்கு அவளைப் பிடிக்கும்

இவ்வளவு கவிதைகள்
காதலுக்காக எழுதப்பட்டதும்
நான் காதலிப்பதையே நிறுத்திவிட்டேன்

எப்படி நீ மறுபடியும்
என்னை எழுத வைத்துவிட்டாய்
காதலுக்கான
இவ்வளவு பெரிய வரிசையில்
நானும் கையில் பூவை வைத்துக்கொண்டு நிற்பது
உன் கண்களை சந்திப்பதுபோலவே
கூச்சமாக உள்ளது.

வெட்கம் வழியும் காதல் நதி நீ
நறுமணங்களின் ஆடி மழை நீ

மலர்ந்ததும் பூக்களுக்கு
மணம் வந்துவிடுவது போல
உன்னைப் பற்றி எழுதும் எதுவும் கவிதையாகி விடுகிறது
ஆனாலும்
உன்னளவிற்கு ஒரு கவிதையை
நான் இன்னும் வாசிக்கவில்லை

உலகின் உயரமான மலர் நீதானா
எப்படி உன்னை நுகர்வது
எனக்கு கொஞ்சம் தெளிவு படுத்தேன்

இதய கோளாறுக்கு கனிகள் நல்லதாம்
உன்னை உண்டால் தனித்தனியாக பிற கனிகளை தேடவேண்டிய
கட்டாயமிருக்காது

என் காதல் தேசத்தின்
தேசியகொடி
உன் மார்புகச்சைதான்

எழுதியவர் : மதுரை விஸ்வா (21-Apr-19, 1:46 pm)
சேர்த்தது : viswa
பார்வை : 486

மேலே