என்னவென்று சொல்வேனடி
புரட்சி வசனம் பேசி
பாச மழை பொழிவதில்
எம்.ஜி.ஆர். போல்.
இழுத்து வளைத்து தீப்
பிடிக்க முத்தம் கொடுப்பதில்
ஆரியா போல்.
கல் நெஞ்சையும் கரைய
வைத்து கண்ணீரை
வரழைப்பதில் சிவாஜி போல்.
கறுப்புக் கட்டழகன்
ஒரு தினிசாய்
நடை போடுவதில்
சூப்பஸ்ரார் ரஜனிபோல்.
பல சாகாசங்கள்
புரிவதில் கமலஹாசன்
போல்.
நாக்கைக் கடித்து பின்னங்
காலால் உதைப்பதில்
விஜயக்காந்து போல்,
ஒரு தடவை முடிவு எடுத்த
பின்னர் யார் பேச்சுக்கும்
செவி மடுக்காமல் இருப்பதில்
விஜய் போல்.
கேலி கிண்டல் பேசி
என்னம்மா கண்ணு என்று
கண் அடிப்பதில்
சத்தியராஜ் போல்.
அடுக்கு மொழி பேசி
கடுப்பேற்றுவதில்
ராஜேந்திரன் போல்.
முத்தத்தால்இதழை
சுத்தம் செய்வதில்
சிம்பு போல்.
வால் இல்லாக்குரங்கு
போல் வலைந்து நெளிந்து
குதித்தாடுவதில் பிரவு
தேவா போல்.
பந்தையம் கட்டி மங்காத்தா
ஆடுவதில் அஜித் போல்.
கூடவே இருந்து குறி
வைத்து தாக்குவதில்
பரத் போல்.
இன்னும் ஏராளமாகக்
கூறலாம்
என்னவனைப் பற்றி .
இத்தனை
அம்சங்களையும்
உள்ளடைக்கியவர்தான்
என் கரம் பிடித்த மன்னன்.....♥