உன்னை இசைத்தல்

மூச்சு விட நேரமில்லை
கட்டியனைத்த நம்மிடையே
காற்றுக்கும் வேலையில்லை

தேனருந்த வந்தவன்
உன்னிடமே தேங்கிவிட்டேன்
இதைவிட கல்லறை வேறெனக்கு
வேண்டாமென தகவலும்
சொல்லிவிட்டேன்

பூத்திருந்த மரங்கள்
இசையவில்லை
ஆரத்தழுவியிருந்த நம்மைக் கண்டு
ஓரணுவும் அசையவில்லை

தாமரை தேசங்கள்
உன்னிடம் தோற்றுவிடும்
இயற்கையும் உன்னிடம்
தன் கிரீடம் கழட்டிவிடும்

உன்னைப் பாடச்சொல்லி
பணித்த கவிஞர்கள்
தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டனர்

உன் தாமதிப்புக்கு பயந்து
பல இதயங்கள் பற்றிக்கொள்கிறது
உன்னைக் கண்டதும் எங்கும்
ஒரு பதட்டம்
தொற்றிக்கொள்கிறது

ஒரு இதயம் கவரப்பட்டால்
காதலென்று சொல்லலாம்
உன்னைப் பகுத்து ஆராய்ந்தால்
நீயே தேவதையென சொல்லலாம்

உனக்கு மிஞ்சி வேறெது நல்லது
உன்னை நம்பியே என் விடியல் உள்ளது

எழுதியவர் : மதுரை விஸ்வா (24-Apr-19, 12:22 pm)
சேர்த்தது : viswa
பார்வை : 291

மேலே