புரியாத கவிதை
இந்த உலகத்திலிருந்து
நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியிருப்பது ரொம்ப சுலபமான
உண்மைதான்
நீங்கள் எதையுமே தெரிந்துகொள்ள வேண்டாம் என்பதுதான் அது
ஆடம்பரத்தின் நிழல்கள் சகலரையும்
பிணைத்துள்ளது
அது தன்னிடம் மட்டுமே பிராகசமாக
ஒளி வீசுவதாக ஒவ்வொருவரும்
நிரூபிக்க விரும்புகிறோம்
ஒரே விதையின் வெவ்வேறு பருவத்தில் பூத்த மலர்கள் நாம்
நம்மிடம் என்ன தனித்துவம்
இருந்துவிட முடியும்
நம்பிக்கை முறியும் ஓசை
சப்தமேயில்லாதது
பாதிக்கப்படும் நபருக்கு மட்டும் அதன் சப்தம் சகிக்க முடியாதது.
மரணத்தைவிட தெளிவான ஒன்றுமில்லை
அதில் உங்களுக்கும் எனக்கும் புரிய ஒன்றும் இல்லையென்பதே
அதன் மிகப்பெரிய கவர்ச்சி