முட்டக்கண்ணு தேவதை

முட்டக்கண்ணு தேவதையே!

மொட்டு விரிஞ்ச முகத்தைப் பார்த்து புத்தி கலங்கி
போனேன்டி!
வெடிச்ச வெள்ளரி பழ வகடை போல விழி பிதுங்கி நின்னேன்டி!

தேனை எடுக்க தேனிக்கூட்டம்-உன்
மேனி எங்கும் மொய்க்குதோ?
தேவதையை கண்ட கிரக்கத்தினாலே அது தேனை தொலைக்க ஏங்குதோ?

போல,புரைய,ஒப்ப, உறல
உவமை யாவும் மறந்ததடி!
போக்கத்து போனவனின் நெஞ்சுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்ததடி!

அன்னப்பறவை நடையழகில் என்னை நசுக்கி கொன்றவளே!
உயிரை உருவி பார்க்கும் கண்ணைக் கொண்டு என்னை மென்று தின்றவளே!

அனிச்சமலரை நீ முகர்ந்த பின்னும் ஏனடி அது வாட வில்லை?
தனிச்சு கேட்கும் உன் குரலைக்கேட்டு குயிலும் ஏனடி பாடவில்லை?

உன் மடியில் படுத்து நட்சதிரங்கள் எண்ண ஆசையடி!

உன் தோளில் சாய்ந்து கதைகள் பேச துடிக்குது என் மீசையடி!!!!!
Ruban Puviyan.........

எழுதியவர் : ரூபன் புவியன் (20-May-19, 3:45 pm)
சேர்த்தது : Ruban puviyan
பார்வை : 371

மேலே